சட்டவிரோதமாக யானை வைத்திருந்த பிரபல நடிகருக்கு நோட்டீஸ்

Bookmark and Share

சட்டவிரோதமாக யானை வைத்திருந்த பிரபல நடிகருக்கு நோட்டீஸ்

சட்டவிரோதமாக யானை வைத்திருந்தது தொடர்பாக, கேரள நடிகர் கணேஷுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. முன்னாள் வனத்துறை அமைச்சரான, நடிகர் கணேஷ், 20 ஆண்டுகளுக்கு முன், வனத்துறையிடம் இருந்து குட்டி யானை ஒன்றை வாங்கிஉள்ளார்.

கவிலம்மா பகவதி கோவில் காணிக்கைக்காக வாங்கப்பட்ட யானையை, இவர், கோவில் உற்சவம் மற்றும் திருவிழாக்களுக்கு அனுப்பி, பணம் சம்பாதித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யானையை வாங்கிய ஆறு மாதங்களுக்குள் கோவிலுக்கு தராவிட்டால், அதை திரும்பவும் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த சட்டத்தை மீறிய கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம், பிராணி நல அமைப்புகள் ஏற்கனவே மனு அளித்திருந்தன.

இதே குற்றச்சாட்டு தொடர்பாக, ஸ்ரீதரன் என்பவர், திருவனந்தபுரம், விசாரணை ஆணையம் மற்றும் ஊழல் கண்காணிப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், கணேஷ் குமாருக்கு, நோட்டீஸ் அனுப்ப, சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions