கோலகலமாக நடந்து முடிந்த கணேஷ் வெங்கட்ராம்-நிஷா திருமணம்

Bookmark and Share

கோலகலமாக நடந்து முடிந்த கணேஷ் வெங்கட்ராம்-நிஷா திருமணம்

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ‘அபியும் நானும்’ படத்தின் மூலம் திரிஷாவுக்கு ஜோடியாக அறிமுகமானர். இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இப்படத்திற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் நடித்தார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த படம் தனி ஒருவன். இப்படத்தில் இவர் 5 நாயகர்களில் ஒருவராக நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி அடைந்து, திரையில் இன்னும் வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில், இவருக்கும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளனி நிஷா கிருஷ்ணனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரண்டு பேரின் வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தற்போது இவர்களது திருமணம்  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் காலை 10 மணிக்கு  நடந்து முடிந்தது.இதில் நடிகர்கள் நடிகர் அரவிந்த்சாமி, விஜய் ஆண்டனி,  ஜெயம் ரவி, மோகன் ராஜா, சாந்தனு, ஸ்ரீகாந்த், நாசர், தரணி, விக்ரம் பிரபு, தொகுப்பாளர் மகேஷ், நீலிமா, நடிகர் பாஸ்கி  உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள்  கலந்துக் கொண்டனர்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions