கணேஷை ஷோலோ காமெடியனாக்கிய விஜயசேதுபதி!

Bookmark and Share

கணேஷை ஷோலோ காமெடியனாக்கிய விஜயசேதுபதி!

விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தில் நடித்து பிரபலமானவர் கருணாகரன். அதன்பிறகு யாமிருக்கே பயமே உள்ளிட்ட சில படங்களில் பிரபலமாகி இப்போது அவர் குறிப்பிடத்தக்க காமெடி நடிகராகி விட்டார். அதேபோல் பீட்சாவில் நடித்த காளி வெங்கட்டும் இப்போது காமெடியனாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தான் நடித்து வரும் தரை டிக்கெட் என்ற படத்தில் இப்போது குண்டு ஆர்த்தியின் கணவரான நடிகர் கணேஷை ஷோலோ காமெடியனாக்கியிருக்கிறார் விஜயசேதுபதி. ஏற்கனவே பல படங்களில் நடித்திருக்கும் கணேஷ், இதுவரை தனி காமெடியனாக நடிக்க சான்ஸ் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில்தான் அவருக்கு தரை டிக்கெட் பட வாய்ப்பு வந்ததாம். அதனால் இந்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக்கொண்டு மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று தான் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளையுமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் நடிக்கிறாராம்.

முன்னதாக, கணேஷ் நடிக்க வேண்டிய காமெடி காட்சிகளில் இன்னும் என்னென்ன விசயங்களை சேர்க்க வேண்டும் என்று அவரது மனைவியான ஆர்த்தியும் காமெடி ஆலோசனைகளை வழங்கியுள்ளாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions