தற்போது சினிமாவில் வரும் பாடல்கள் மக்கள் மனதில் நிற்பது இல்லை- கங்கை அமரன்!

Bookmark and Share

தற்போது சினிமாவில் வரும் பாடல்கள் மக்கள் மனதில் நிற்பது இல்லை- கங்கை அமரன்!

மகாகவி பாரதியார் பிறந்த தின விழாவுக்கு ஜெய்சூர்யாஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் டி. நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “ பாரதியார் பாடல் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும். தமிழ் பற்றும் அதிகம் இருக்கும். கண்ணதாசன் முதல் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வரை பாரதியார் பாட்டின் வரி அவர்களின் பாட்டில் எதிரொலிக்கும்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தமிழின் கலாச்சாரம் தெரிவதில்லை. இதை சொல்லி கொடுக்க வேண்டும். 

தமிழ் கலாச்சாரத்தை நாம் யாரும் மறந்து விடக்கூடாது. இப்போது வரும் சினிமா பாடல் வரிகள் புரிவதில்லை. இசை தான் அதிகமாக உள்ளது. பாட்டின் வார்த்தைகள் புரியவில்லை. ஒரு சிலர் ஆங்கில பாட்டை காப்பி அடித்தும் தமிழில் பாடுகிறார்கள். 

இப்போது பல சினிமாவில் வரும் பாடல்கள் மக்கள் மனதில் நிற்பது இல்லை. அதே சமயம் பழைய பாடல்கள் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளது. காரணம் பாட்டின் வரிகளின் இனிமையாகும். ஆனால் இப்போது பாட்டை விட இசை தான் முன்னே நின்று பாட்டின் வரியை கேட்க விடாமல் செய்து விடுகிறது. 

இதனால் தான் மக்கள் மனதில் பழைய பாடல் இன்னமும் நிலைத்து நிற்கிறது. தொடர்ந்து நிலைத்து இருக்கும். சினிமா பாடலில் ஆபாச வரி இருக்கக்கூடாது. இதை ஒரு போதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் தொடர்ந்து ஆபாச பாடல் இருக்கக் கூடாது என கேட்டு கொள்கிறேன். 

நானும் என் குழந்தைகளும் சினிமாவில் தொடர்ந்து இருக்கிறோம். இசையில் நடிப்பிலும் என் குடும்பத்தினர் சார்ந்து உள்ளனர். தொடர்ந்து சினிமாவில் இருப்போம்” என்றார் அவர்.

 


Post your comment





Related News
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions