சங்கீதத்தையும், யோகாவையும் கற்றால் கவலைகள் பறந்துவிடும்: கங்கை அமரன்

Bookmark and Share

சங்கீதத்தையும், யோகாவையும் கற்றால் கவலைகள் பறந்துவிடும்: கங்கை அமரன்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் நடந்த யோகா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்தில் வாழும் கலை அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் ‘டி’ பிளாக் வளாகத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மைதானததில் நடைபெற்றது. இதில் மத்திய– மாநில அரசுத்துறைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்பட 50–க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்றனர்.

வாழும் கலை அமைப்பின் மாநிலத் தலைவர் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். அமைப்பின் ஆலோசகர், ரவிச்சந்திரராமவன்னி, செய்யது அம்மாள் கல்லூரி செயலர் சின்னத்துரை அப்துல்லா, சேவா பாரதியின் தலைவர் ஆடலரசன், வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் நம்பி.நாராயணன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இசை அமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

யோகா தினத்தை சர்வதேச தினமாக கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சங்கீதத்தையும், யோகாவையும் கற்றுக் கொண்டால் மனம் லயிப்பதுடன், கவலைகளும் பறந்து போய் விடும். மூச்சு எவ்வளவு இழுத்துவிட வேண்டும் என்பதை யோகா கற்றுத் தருகிறது.

அதையே சங்கீதமும் கற்றுத் தருகிறது. இளையராஜாவின் பாடல்கள் உள்பட பெரும்பாலான பாடல்கள் தியானத்தில் பிறந்தவையாகத்தான் இருக்கின்றன. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெற்றோர் யோகா கற்றிருந்தால் மட்டும் அனுமதி என்று அனைத்து பள்ளிகளும் அறிவிக்கும் நிலை ஏற்படவேண்டும்.

தினசரி காலையில் இறை வணக்கம் பாடலை பள்ளியில் மாணவர்கள் பாடும்போது யோகாவுக்கும் சில நிமிடங்கள் ஒதுக்கி அதனை கற்றுக் கொடுத்தால் மாணவர்களுக்கு ஆரோக்கியம் ஏற்படுவதுடன் மனதில் நல்ல எண்ணங்கள் ஏற்படும். மன வளத்தையும், உடல் வளத்தையும் கற்றுத் தருவதுதான் யோகா என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக யோகா தின விழிப்புணர்வு பேரணியை மண்டபம் இந்திய கடலோர காவல்படையின் கமாண்டன்ட் ஹெச்மோரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மைதானத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு 30 நிமிடங்கள் எளிமையான யோகா பயிற்சி நடைபெற்றது.

விழாவில் பா.ஜனதா மாநில துணைத் தலைவர்கள் குப்புராமு, சுப.நாகராஜன், செய்யது அம்மாள் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, இன்பென்ட் ஜீசஸ் பள்ளி முதல்வர் ஸ்டீபன் சவரிராஜ், ரோட்டரி சங்க நிர்வாகி சண்முக ராஜேஸ்வரன் உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். வாழும் கலை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன் நன்றி கூறினார்.


Post your comment

Related News
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions