வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!

Bookmark and Share

வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!

பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தனது நண்பர்கள் எஸ்.பி. ஜெகதீஸ் மற்றும் டாக்டர். ஹரிஹரன் ஆகியோருடன் இணைந்து தொடங்கியிருக்கும் முகநூல் குழுவின் பெயர்தான் ‘நண்பேன்டா’.

இந்த குழுவில் உள்ள அனைவரும் வருடந்தோறும் ஒருமுறை பொது இடங்களில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த வருடம் ஏ.வி.எம் கார்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு இந்த வருடம் GRD நட்சத்திர ஹோட்டலில் நேற்று (30.5.16) நடைபெற்றுள்ளது.

இதில் வெங்கட் பிரபு, ஹிப்ஹாப் தமிழா, ஏ.ஆர். ரஹைனா ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இயக்குனர் சுந்தர் சி, நட்சத்திர தம்பதிகளான ஆர்த்தி – கணேஷ், இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மற்றும் நடிகர்கள் ஜெய், சதீஷ், எஸ்.வி. சேகர், லொள்ளு சபா மனோகர், பாண்டு, பாரதி மற்றும் பலர் இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் ஜெயவேலுடன் இணைந்து இந்த மூவரும் ‘நண்பேன்டா ப்ரொடக்ஷன் கம்பெனி’ எனும் பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் வரும் லாபத்தை அனாதை குழந்தைகளுக்கும் மேலும் திரைத்துறையை சேர்ந்த ஏழை குழந்தைகளுக்கு வழங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா?
பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்!- கங்கை அமரன்
தற்போது சினிமாவில் வரும் பாடல்கள் மக்கள் மனதில் நிற்பது இல்லை- கங்கை அமரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions