கேரக்டர் நடிகராகும் கஞ்சா கருப்பு!

Bookmark and Share

கேரக்டர் நடிகராகும் கஞ்சா கருப்பு!

மற்ற காமெடியன்களைப்போலவே கஞ்சா கருப்புவுக்கும் ஹீரோ ஆசை தலை தூக்கியதால், மன்னார் வளைகுடா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் கஞ்சா கருப்புவுக்கு கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவன் வேடம்.

ஆனால், முதல்கட்ட படப்பிடிப்பு நடந்த அந்த படத்தின் படப்பிடிப்பு பின்னர் நடக்கவே இல்லை. தனால் தான் ஹீரோவாக அரிதாரம் பூசிய முதல் படமே கிடப்பில் கிடக்கிறதே என்று பீல் பண்ணிய கஞ்சா கருப்பு, பின்னர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து மெயின் ரோலில் நடித்தார்.

கருணாஸ் போன்ற காமெடியன்களை மாதிரி டூயட் பாடவில்லை என்றபோதும், கவர்ச்சி நடிகை ரகசியாவை தனக்கு ஜோடியாக்கிக்கொண்டார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.

இதனால் பண இழப்புகளை சந்தித்த கஞ்சா கருப்புவுக்கு எதிர்பார்த்தபடி சமீபகாலமாக தனது காமெடி ஒர்க் அவுட்டாகவில்லை என்பதால், ரூட்டை மாற்றும் முய்றசியில் ஈடுபட்டிருக்கிறார்.

அதாவது காமெடியன், ஹீரோ அவதாரங்களைத் தொடர்ந்து கேரக்டர் நடிகராக களமிறங்குகிறார். இந்த ரூட் ஒருவேளை ஒர்க் அவுட் ஆகிவிட்டால். அதன்பிறகு காமெடி, கேரக்டர் என இரண்டுவிதமான பாதைகளிலும் பயணிக்கத் தொடங்கி விடுவாராம் கஞ்சா கருப்பு. 


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு
மலையாளத்தில் கவனம் செலுத்தும் கஞ்சா கருப்பு..!
கஞ்சா கருப்பு - மலையன் கோபி சமாதானம்!
“நட்பு”க்காக ஹோட்டல் பிஸினஸில் குதிக்கும் “கருப்பு”!
நான் எப்போதும் காமெடியன்தான்! -கஞ்சா கருப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions