நான் எப்போதும் காமெடியன்தான்! -கஞ்சா கருப்பு

Bookmark and Share

நான் எப்போதும் காமெடியன்தான்! -கஞ்சா கருப்பு

பிதாமகன் படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதிலிருந்து காமெடியனாகவே தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு, கருணாஸ் உள்ளிட்ட சில காமெடியன்கள் ஹீரோவாக நடிப்பதைப் பார்த்து ஹீரோ ஆசை ஏற்பட்டது.

விளைவு, வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தானே தயாரித்து கதையின் நாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியடைந்து அவரது கையை பலமாக கடித்து சேதப்படுத்தி விட்டது.

அதனால் இனி இந்த விஷப்பரீட்சையே வேண்டாம் என்று முடிவெடுத்து, மறுபடியும் காமெடி ரூட்டுக்கு வந்து விட்டார். அதோடு, தனது அபிமான தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு காமெடி வேடம் கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்து வருகிறார்.

இருப்பினும், காமெடியனாக இருந்த கஞ்சா கருப்பு, இப்போது கதாநாயகனாகவும் உருவெடுத்திருப்பதால், அவருக்கு பெரிய சம்பளமாக கொடுக்க வேண்டியதிருக்குமே என்று அவர்கள் தயங்கி நிற்கின்றனர்.

இதை தெரிந்து கொண்ட கஞ்சாகருப்பு, இப்போது அவர்களை அணுகி, நான் எப்போதுமே காமெடியன்தான். அதனால் என் காமெடிக்கு எப்போதும் என்ன கொடுப்பீர்களோ அதை கொடுத்தாலே போதும். தயவு செய்து ஹீரோ என்று முத்திரை குத்தி என்னை ஓரங்கட்டி என் வயித்தில் அடித்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்.

 


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு
மலையாளத்தில் கவனம் செலுத்தும் கஞ்சா கருப்பு..!
கஞ்சா கருப்பு - மலையன் கோபி சமாதானம்!
“நட்பு”க்காக ஹோட்டல் பிஸினஸில் குதிக்கும் “கருப்பு”!
கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா? - கஞ்சா கருப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions