கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா? - கஞ்சா கருப்பு

Bookmark and Share

கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா? - கஞ்சா கருப்பு

சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தை இயக்கியவர் ஸ்ரீமகேஷ். அவர் 12 வருடங்களுக்குப்பிறகு தற்போது சரித்திரம் பேசு என்ற படத்தை இயக்கியுள்ளார். சரவணன், கிருபா, கன்னிகா, தாரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டைரக்டர் பேரரசு, காமெடியன் கஞ்சாகருப்புவை நேரடியாகவே தாக்கிப் பேசினார்.

அதாவது, பேச ஆரம்பிக்கும்போதே, திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்று தொடங்கியவர், நான் இதுவரைக்கு பல ஆடியோ நிகழ்ச்சிகள்ல பார்த்துட்டேன். இந்த கஞ்சா கருப்பு கதாநாயகி பக்கத்துலதான் உட்காருறாரு.

இந்த விழாவுக்கு வந்தப்பவும் நான் கவனிச்சிக்கிட்டேதான் இருந்தேன். கரைக்ட்டா கதாநாயகி பக்கத்துல போய் செட்டிலாகிட்டாரு. இனிமே அவரை யாரும் அப்படி உட்கார அலோவ் பண்ணாதீங்க.

ஆண்கள் பக்கத்துல உட்கார வையுங்க என்று கிண்டலாக பேசினார். அதன்பிறகு பேசிய இயக்குனர் ராஜ்கபூரும் பேரரசு பேச்சுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலேயே பேசினார்.

ஆனால் அவர்களைத் தொடர்ந்து பேச வந்த கஞ்சா கருப்புவோ, அவர்களுக்கு நெத்தியடியாக பதில் கொடுக்கப்போகிறார் என்று பார்த்தால், கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா? எங்க அண்ணனுங்க என்ன பேசினாலும் அது என்னை ஒன்னும் பாதிக்காது என்று சொல்லிவிட்டு போய் அமர்ந்து விட்டார்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு
மலையாளத்தில் கவனம் செலுத்தும் கஞ்சா கருப்பு..!
கஞ்சா கருப்பு - மலையன் கோபி சமாதானம்!
“நட்பு”க்காக ஹோட்டல் பிஸினஸில் குதிக்கும் “கருப்பு”!
நான் எப்போதும் காமெடியன்தான்! -கஞ்சா கருப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions