கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!

Bookmark and Share

கஞ்சா கருப்பு மீது பெண் இயக்குனர் புகார்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தனது முன்னாள் மானேஜர் வி.கே.சுந்தர் என்பவர் தன்னை ஏமாற்றி 4 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டார் என்றும்.அவரது மனைவியும் கள்ளன் பட இயக்குனருமான சந்திராவும் இந்த மோசடிக்கு உடந்தை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் சந்திரா விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பது;- எனக்கும் எனது கணவர் திரு வீ.கே.சுந்தருக்கும் 1995 ல் திருமணம் ஆனது முதல் நான் சென்னையில் வசித்து வருகிறேன். முதலில் பத்திரிகைத்துறையில் செய்தியாளராக பணியாற்றி பின்னர் திரைப்படத்துறையில் பணியாற்றி வந்தேன்.

நான் தற்போது கள்ளன் என்ற திரைப்படத்திற்கு கதை.திரைக்கதை.வசனம் ஆகிய பணிகளை ஏற்று அப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டுமின்றி நான் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளேன்.

நான் எழுதிய நூல்கள் பல்வேறு புகழ் பெற்ற பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பெண்ணிய அமைப்புகளோடும், சமூக அமைப்புகளோடும் இணைந்து சமூக பணிகளையும் செய்து வருகிறேன்.

கஞ்சா கருப்பு என் கணவர் வீ.கே.சுந்தர் பற்றியும் அவரது நண்பர்கள் மற்றும் சில பொதுநபர்களைப் பற்றியும் பொய்யான,தவறான,உண்மைக்கு மாறான அவதூறான செய்திகளை அளித்துள்ளார்.

இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அவமானத்திற்கும் அவமரியாதைக்கும் ஆளாகியுள்ளோம். மேலும் அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாங்க இயலாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று அந்த மனுவில் இயக்குனர் சந்திரா தெரிவித்திருக்கிறார்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
கஞ்சா கருப்பை மேடையிலே திட்டிய இயக்குனர் பாலா - ஏன்?
விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா
அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார்: கஞ்சா கருப்பு
மலையாளத்தில் கவனம் செலுத்தும் கஞ்சா கருப்பு..!
கஞ்சா கருப்பு - மலையன் கோபி சமாதானம்!
“நட்பு”க்காக ஹோட்டல் பிஸினஸில் குதிக்கும் “கருப்பு”!
நான் எப்போதும் காமெடியன்தான்! -கஞ்சா கருப்பு
கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா? - கஞ்சா கருப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions