பேய் என்பதே இல்லை: கங்கை அமரன் பேட்டி

Bookmark and Share

பேய் என்பதே இல்லை: கங்கை அமரன் பேட்டி

அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘என்னமா கதவுடுறானுங்க’.

வி.பிரான்சிஸ்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய் ஆனந்த் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது.

பாடல்கள், இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் வெளியிட்டுள்ளார். அவர் பேசும்போது, “என்னமா கதவுடுறானுங்க” படத்தின் இசையமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் எங்கள் அக்கா மகன்.

அந்தக் காலத்திலிருந்து கதை விட்டுத்தான் வருகிறோம். நாமெல்லாம் கதை விட்ட காலத்தில் பிறந்தவர்கள். எங்கள் அம்மா பேய்க்கதை சொல்லிப் பயமுறுத்துவார்கள்.

பேய் என்று ஒன்று இல்லை. மனம்தான் பேய், கற்பனைதான் பேய், எண்ணம்தான் பேய். இருக்கிறதை வைத்து வாழாமல் பேராசையால் பேயாய் உழைக்கிறார்கள்.

இன்று அரசியலில் எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டுகிறது. மேடையேறி விட்டால் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று பேயாய் பயமுறுத்து கிறார்கள்.

எல்லாருக்குள்ளும் வேகம் என்கிற பேய், வெறி என்கிற பேய் பிடித்து ஆட்டுகிறது. ஆசைதான் பேய் எங்களை இசைப்பேய் பிடித்து ஆட்டுகிறது.

நான் தேசிய விருதுக்குழுவில் பொறுப்பில் இருந்தேன். என்.சிபாரிசால்தான் அண்ணன் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்ததா என்று கேட்கிறார்கள். தேசிய விருதுக்குழு வேலை என்பது சிரமமான வேலை. அப்படி சிபாரிசு எல்லாம் ஒன்றுமில்லை” என்றார்.

விழாவில் இயக்குனர் நடிகர் ரவிமரியா, நடிகர்கள் மதன்பாப், சாம்ஸ், படத்தின் இயக்குனர் பிரான்சிஸ் ராஜ், நாயகன் அர்வி, கவிஞர் சினேகன், நாயகிகள் ஷாலு, அலிஷா சோப்ரா, இசையமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.


Post your comment





Related News
ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது - பிரேம்ஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!
மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்
என் சொத்தை பிடிங்கிக்கொண்டார்கள் – சசிகலா குறித்து கங்கை அமரன் அதிர்ச்சி தகவல்!
நாள் பாடல்களை திருடித்தான் இசையமைக்கிறேன் – பிரேம்ஜி ஓபன் டாக்!
கங்கை அமரன் வாட்ஸ் அப் குழுவின் வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா!
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: கங்கை அமரன் பேட்டி
அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேருகிறார் கங்கை அமரன்
அண்ணனுக்காக வரிந்து கட்டிய பிரேம்ஜி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions