தேசிய விருதை தவற விட்ட கங்காரு!

Bookmark and Share

தேசிய விருதை தவற விட்ட கங்காரு!

சமூக கண்ணோட்டத்துடன் படம் எடுத்து சர்ச்சைகளை சந்தித்து பின்னர் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் 'உயிர்' சாமி. இவர் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் கங்காரு.

இந்த படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்திருந்தார். காங்காரு உருவாவதற்கு பின்பு படபிடிப்பு நடந்து இவர் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் நாகராஜன் சோழன். ஆனால் காங்காரு திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

சிக்கலுக்கான காரணம் பணம். இதனை சரி செய்ய சாமி தன் காரை விற்று பணம் கொடுத்திருக்கிறார் இந்த பணமும் இன்னும் சாமிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் கங்காரு படம் திரைக்கு வர உள்ளது.

இது ஒரு புறமிருக்க நேற்று முன்தினம் தமிழில் உருவான சில படங்களுக்கு தொழில்நுட்ப கலைஞர், பாடல் ஆசிரியருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. குறிப்பாக குற்றம் கடிதல் என்ற குறும்படத்தை பெரும் படமாக்கி திரையிடாமல் விருதுக்கு அனுப்பி விருதை வாங்கி விட்டனர். இதே போல காங்காரு படத்தை அனுப்பியிருந்தால் என் படத்துக்குதான் விருது கிடைத்திருக்கும் என வருந்துகிறார் சாமி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions