கவுண்டமணிக்கு 2 ஜோடியாம்!

Bookmark and Share

கவுண்டமணிக்கு 2 ஜோடியாம்!

49 ஓ, வாய்மை படங்களை அடுத்து கவுண்டமணி நடிக்கும் புதிய படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. இந்த படத்தில் கேரவன் உரிமையாளராக நடிக்கிறார் கவுண்டமணி.

ரீ-என்ட்ரியில் அவர் நடித்த இரண்டு படங்களுமே இன்னும் திரைக்கு வராதபோதும் இந்த பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மதுரையில் நடக்க இருப்பதால், தற்போது அப்பட டைரக்டர் மதுரையில் கடந்த சில நாட்களாக லொகேஷன் பார்த்து சென்னை திரும்பியுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு நடித்த படங்களில் கவுண்டமணிக்கு ஜோடி இல்லாதபோதும், இந்த படத்திற்கு அதற்கும் சேர்த்து 2 நடிகைகளை ஜோடி சேர்க்கிறார்களாம். வருகிற மார்ச் 1-ந்தேதி இபபடத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்படவிருக்கும் நிலையில், கவுண்டமணியுடன் டூயட் பாடப்போகிற அந்த இரண்டு நடிகைகளை தேர்ந்தெடுக்கும் தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

அதனால் இன்னும் சில நாட்களில் கவுண்டருடன் டூயட் பாடப்போகிற நடிகைகள் யார் என்பது உறுதி செய்யப்பட்டு விடுமாம். ஆக, கவுண்டர் கட்டிப்புடி நடனமாடப்போகிற நடிகைகள் கவர்ச்சி நடிகைகளா? இல்லை குடும்ப நடிகைகளா? என்பது விரைவில் தெரிந்து விடும். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions