காமெடி, திரில்லர் கதையை உருவாக்கும் கௌரவ்

Bookmark and Share

காமெடி, திரில்லர் கதையை உருவாக்கும் கௌரவ்

‘தூங்கா நகரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கௌரவ். இப்படத்தில் விமல் நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்திருந்தனர். இப்படம் மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் மையமாக வைத்து உருவானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதும் இப்படத்திற்கு கிடைத்தது.

இப்படத்தையடுத்து விக்ரம் பிரபுவை வைத்து ‘சிகரம் தொடு’ படத்தை இயக்கினார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மோனல் கஜ்ஜார் நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ்ஜும், இயக்குனர் கௌரவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தனர். இப்படம் தந்தை, மகன் உறவைப் பற்றியும், ஏடிஎம் கொள்ளை பற்றியும் மையமாக வைத்து இப்படம் உருவானது. இப்படமும் நன்றாக ஓடியது.

தற்போது அடுத்த படத்திற்கு தயாராக இருக்கும் கௌரவ், இந்த முறை காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக்க இருக்கிறாராம். மேலும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் முடிந்து விட்டதாகவும், விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய முழு விவரமும் அறிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 


Post your comment





Related News
இந்த காமெடிய வேற எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! காமெடி காப்பி
வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை: `மாநகரம்' சதீஷ்
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
இதென்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வந்த சோதனை?
மாநகரம் படத்திற்கு சூர்யாவின் சர்டிஃபிக்கேட் ! சொன்னது என்ன
மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்
\'மணல்நகரம்\' படத்தின் துபாய் வில்லன் விகே.
துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ​ \'மணல் நகரம்\' தயாரிப்பாளரின் அனுபவம்
உண்மைச் சம்பவத்தை படமாக்குவது கடினம்: சங்கர்
\'ஒருதலை ராகம்\' புகழ் சங்கர் இயக்கும் படத்தில் துபாய் பெண் ஹீரோயின்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions