தனுஷுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனையா?: அப்போ இஎன்பிடி படம்?

Bookmark and Share

தனுஷுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனையா?: அப்போ இஎன்பிடி படம்?

தனுஷுக்கும், இயக்குனர் கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனை என்றும், அதனால் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. டீஸர் அனைவரையும் கவர்ந்தது என்றே கூற வேண்டும்.

தனுஷ் 

எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸாவதாக தெரியவில்லை. தனுஷ் விஐபி2 மற்றும் பவர் பாண்டி ஆகிய படங்களில் பிசியாகிவிட்டார். அவரின் வட சென்னை படமும் பாதியில் நிற்கிறது.

கவுதம் 

கவுதம் மேனன் விக்ரமை வைத்து இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் கவுதம், தனுஷ் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பு 

எனை நோக்கி பாயும் தோட்டா படம் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்கு மேல் மீண்டும் தொடரலாம் என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினம் 

படத்தில் காதலுக்காக தோட்டாவை ஏற்க துணிகிறார் தனுஷ். படம் காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் தற்போதைய நிலையை பார்த்தால் அதற்கு வாய்ப்பே இல்லை.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions