தடுமாறும் கௌதம் கார்த்திக் படங்கள்

Bookmark and Share

தடுமாறும் கௌதம் கார்த்திக் படங்கள்

ஒரு காலத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்து இளம் பெண் ரசிகைகளைக் கவர்ந்தவராக இருந்தவர் கார்த்திக். அவருடைய மகன் கௌதமை மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் நாயகனாக நடிக்க வைத்தார். அந்தப் படம் எதிர்பாராமல் தோல்வியடைந்து விட்டது.

அடுத்து தெலுங்கில் வெற்றி பெற்ற 'அலா மொதலந்தி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'என்னமோ ஏதோ' படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படமும் தோல்வியடைந்தது. மூன்றாவதாக வெளிவந்துள்ள 'வை ராஜா வை' படத்தை அந்தப் படக்குழுவினர் மட்டுமே வெற்றிப் படம் என மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆனால், 'வை ராஜா வை' படம் 13 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ளதாம். அந்தத் தொகையை படம் வசூலிப்பது கடினம் என்கிறார்கள். இதனிடையே கௌதம் கார்த்திக் நடித்து வரும் சில படங்கள் பணப் பிரச்சனையால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்தப் படங்கள் மேலும் வளருமா அல்லது அப்படியே நின்று விடுமா என்பதும் சந்தேகமாக உள்ளது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், லட்சமி மேனன் நடிக்க 'சிப்பாய்' என்ற படம் 2013ம் ஆண்டு ஆரம்பமானது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நின்றுவிட்டது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் ராஜ்குமார் இயக்கி வரும் 'ரங்கூன்' படமும் பாதியில் நிற்கிறதாம்.

இரண்டு படங்களுமே ஃபைனான்ஸ் பிரச்சனையில் தடுமாறி வருகிறது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு 'சக்கரக்கட்டி' படத்திற்குப் பிறகு இயக்கி வரும் 'இந்திரஜித்' படத்திலும் கௌதம்தான் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்தப் படம் எப்போது முடியும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. திரையுலக வாரிசாக நுழைந்துள்ள கௌதம் கார்த்திக் ஒரு முழுமையான, தனக்கான வெற்றியைச் சுவைக்கும் படியான படத்தைக் கொடுத்தால் மட்டுமே இன்றைய போட்டியில் சமாளிக்க முடியும் என்கிறார்கள்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions