சேட்டை இயக்குனருடன் இணைந்த கவுதம் கார்த்திக்!

Bookmark and Share

சேட்டை இயக்குனருடன் இணைந்த கவுதம் கார்த்திக்!

ஆர்யா, பிரேம்ஜி அமரன், சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘சேட்டை’ படத்தை இயக்கியவர் கண்ணன். இதுமட்டுமில்லாமல், ‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார். 

இந்நிலையில், அடுத்ததாக கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய படமொன்றையும் கண்ணன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்திற்கு வி.என்.மோகன் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ‘ஐ’ படத்தில் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின்மூலம் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் 12-ந் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளனர். தொடர்ந்து ஒரேகட்டமாக 30 நாட்களுக்குள் இப்படத்தை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை அபிரா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆஷாஸ்ரீ தயாரிக்கிறார். இப்படத்திற்கான தலைப்பு தேர்வும் நடைபெற்று வருகிறது. 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions