அப்பா இடத்தை பிடிக்க முயற்சிக்கும் கெளதம் கார்த்திக்!

Bookmark and Share

அப்பா இடத்தை பிடிக்க முயற்சிக்கும் கெளதம் கார்த்திக்!

அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் கார்த்திக். அவரைப்போலவே ராதாவும் அந்த படத்தில்தான் அறிமுகமானார். பாரதிராஜாவின் மோதிரக்கையினால் குட்டுப்பட்ட அவர்கள் இருவருமே பின்னர் முன்னணி நடிகர் நடிகையாக வலம் வந்தனர். இதில் கார்த்திக் தனக்கென ஒரு பாணியில் நடித்து ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தார்.

ஆனால், மார்க்கெட் ஓரளவு தொய்வடைகிறது என்றதும் அரசியலில் பிரவேசித்தார். அதன்காரணமாக அவருக்கென இருந்த மார்க்கெட் முற்றிலுமாக சரிந்து விட்டது. அதையடுத்து அவர் அனேகன் உள்பட சில படங்கள் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தபோதும் அவரால் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான அவர் மகன் கெளதம், பின்னர் என்னமோ ஏதோ என்ற படத்திலும் நடித்தார். இப்போது அவர் நடிப்பில் வை ராஜா வை படம் திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. அதோடு, இந்திரஜித், சிப்பாய், ரங்கூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் கெளதம்.

ஆனால், அப்பா பாணியில் இல்லாமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்க முயற்சித்து வரும் கெளதமிடம், உங்கள் அப்பா விட்டுச்சென்ற இடம் இன்னும் அப்படியேத்தான் உள்ளது.

அதை நீங்கள்தான் பிடிக்க வேண்டும் என்று கார்த்திக்கின் அபிமானிகள் சிலர் வலியுறுத்துவதோடு, உங்கள் தந்தையின் ரசிகர்கள் அதற்காகவே வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் அப்பா இடத்தை தன்னால் நிரப்ப முடியுமா? என்கிற சந்தேகம் இருந்தாலும், மற்றவர்கள் உற்சாகப்படுத்துவதால் அந்த இடத்தை கைப்பற்றுவேன் என்று புதிய உத்வேகத்தில் செயல்படத் தொடங்கியிருக்கிறார் கெளதம். 

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions