வெற்றியை ருசிப்பாரா கௌதம் கார்த்திக்?

Bookmark and Share

வெற்றியை ருசிப்பாரா கௌதம் கார்த்திக்?

80களின் இளமை நாயகன் கார்த்திக்கின் வாரிசு, மிகப் பெரும் இயக்குனர் மணிரத்னத்தின் அறிமுகம் என 'கடல்' மூலம் நாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். யாரும் எதிர்பாராத விதத்தில் 'கடல்' படம் மாபெரும் தோல்வியடைந்தது.

ஒரு அறிமுக நடிகருக்கு முதல் பட தோல்வி என்பது மிகவும் தடுமாற்றமான ஆரம்பமாகவே இருக்கும். எப்படியாவது இரண்டாவது படத்திலாவது எழுந்து விடலாம் என்றுதான் நினைப்பார்கள்.

ஆனால், கௌதமைப் பொறுத்தவரையில் இரண்டாவது படமாக வெளிவந்த 'என்னமோ ஏதோ' படமும் அவரை எழ முடியாமலே செய்துவிட்டது. இப்போது மூன்றாவது படமாக 'வை ராஜா வை' படம் மே 1ம் தேதி வெளிவர உள்ளது.

முதல் இரண்டு படங்கள் அவரை முழுமையாக ஏமாற்றி விட்ட நிலையில் இந்த மூன்றாவது படம்தான் கௌதமிற்குக் கை கொடுக்க வேண்டும். இந்தப் படம் வெற்றி பெற்றால் மட்டுமே அவரைத் தேடி புதுப் பட வாய்ப்புகள் வரும். அவரும் ஓரளவிற்கு முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்க முடியும்.

ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் 'வை ராஜா வை' என்று சொல்லப்பட்டாலும், தமிழுக்குப் பொருத்தமான கதையாக இருந்தால் மட்டுமே படம் இங்கு வெற்றி பெற முடியும்.

'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்று பாடி வெற்றிக் கோட்டையைப் பிடித்தவரின் வாரிசை இந்த 'வை ராஜா வை' நல்ல இடத்தில் வைக்குமா ? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions