கவுதம் கார்த்திக் படத்தில் ஆர்யா நடனம்

Bookmark and Share

கவுதம் கார்த்திக் படத்தில் ஆர்யா நடனம்

கவுதம் கார்த்திக் -வைபவி நடித்து வரும் படம் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’.  இப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்துடன் ‘கஜினிகாந்த்’ படத்தையும் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதையும் ஜெயக்குமார் தான் இயக்குகிறார். 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிகர் ஆர்யாவும் நடனம் ஆடி இருக்கிறார். இதுகுறித்து ஆர்யா கூறுகையில், “ஒரு நாள், இயக்குனர் ஜெயக்குமார் திடீர் என்று என்னை ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்துச்சென்றார். திடீர் என்று கவுதம் கார்த்திக் உடன் என்னையும் நடனம் ஆட வைத்து விட்டார்.

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவேன் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை. என்னைப்போலவே இயக்குனருக்கும் அந்த எண்ணம் இல்லை. திடீர் என்று எடுத்த முடிவு தான். கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடனம் ஆடியது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது” என்றார்.


Post your comment





Related News
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
என்னது பாலா படத்தில் என் மகளா? அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
தலயின் மெகா ஹிட் பட இயக்குனர் படத்தில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா - செம தகவல்.!
கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.!
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
Mr.சந்திரமௌலி' படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால் !!!
Mr.சந்திரமௌலி படத்தின் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions