கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்கும் சற்குணம்

Bookmark and Share

கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்கும் சற்குணம்

‘கடல்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், இப்படத்திற்குப் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் நடித்தார். இதன் பிறகு ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’, ‘ரங்கூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘வை ராஜா வை’ மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது கௌதம் கார்த்திக் மூன்று படங்களில் நடித்து வந்தாலும், மேலும் ஒரு புது படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘வாகை சூடவா’, ‘களவாணி’ படங்களை இயக்கிய சற்குணம், கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.

தற்போது சற்குணம் ‘சண்டி வீரன்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக அதர்வா நடித்து வருகிறார். நாயகியாக ஆனந்தி நடித்து வருகிறார். இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் முடிவடைந்த பிறகு கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions