கௌதம் மேனனின் புத்திசாலித்தனம்!

Bookmark and Share

கௌதம் மேனனின் புத்திசாலித்தனம்!

நடிகர்களுக்கு ஏற்றவாறு படப்பிடிப்பை திட்டமிடுவதில் கில்லாடியாக இருக்கிறார் கௌதம் மேனன். அஜித்தை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால், மக்களின் பார்வை படாத இடங்களிலும் பின்னி மில் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தி எந்தப்பிரச்சனையும் இல்லாமல் என்னை அறிந்தால் படத்தை எடுத்து முடித்தார்.

என்னை அறிந்தால் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது சிம்புவை வைத்து அச்சம் என்பது மடைமையடா படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். சிம்புவுக்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் நடிகை பல்லவி சுபாஷ் நடிக்கிறார்.  

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில்லர் என மூன்றும் கலந்த கலவையாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் கௌதம் மேனன்.

அச்சம் என்பது மடைமையடா படத்தின் டாக்கி போர்ஷனுக்கான படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டதாம். ஒரு சில பாடல்களைத் தவிர்த்து படத்தின் 95% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

சிம்புவை வைத்து எந்த பிரச்சனையுயில்லாமல் எப்படி படத்தை எடுத்தார் என்பதுதானே உங்கள் கேள்வி? ராத்திரி முழுக்க பப், பார்ட்டி என ஜாலியாக இருந்துவிட்டு அதிகாலையில் உறங்கப்போகும் சிம்பு மதியம்தான் எழுவார்.

இப்படி ஒரு குணம் கொண்ட சிம்புவை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்தினால் வேலைக்கு ஆகாது என்பதால் கதையில் சின்னச்சின்ன மாற்றங்களை செய்து பெரும்பாலும் இரவு நேரத்திலேயே படப்பிடிப்பு நடத்திமுடித்துவிட்டார் கௌதம் மேனன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions