அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் - கௌதம் மேனன்!

Bookmark and Share

அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் - கௌதம் மேனன்!

முதன்முறையாக, அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் கடந்தவாரம் பிப். 5ம் தேதி வெளியாகியுள்ள படம் ’என்னை அறிந்தால்’. அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

படத்தைப் பற்றி அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்று பல்வேறு விதமான விமர்சன கருத்துக்கள் எழுந்தாலும் படம் நன்றாக இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அதுவே படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளதாகத் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.50 கோடி வசூலித்ததாக சொல்கிறார்கள்.

இந்நிலையில் தனியார் டிவி., நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட ’என்னை அறிந்தால்’ படக்குழுவினர் படம் பற்றியும், அஜீத் பற்றியும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது கௌதம் மேனனிடம், உங்களது படங்கள் ஹாலிவுட் படங்கள் போன்று இருப்பதாகவும், உங்களுக்கு ஹாலிவுட் படம் இயக்க ஆசை உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌதம் மேனன், எனக்கு ஹாலிவுட் நடிகர்களை வைத்து எல்லாம் படம் இயக்க ஆசையில்லை, நம்மூர் தமிழ் நடிகர்களை கொண்டு ஹாலிவுட்டில் படம் இயக்க ஆசை இருக்கிறது.  

குறிப்பாக அஜீத்தை வைத்து ஒரு அட்டகாசமான ஆங்கில படத்தை எடுக்க எண்ணியுள்ளேன். அவர் சம்மதித்தால் அது நடக்கும் என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions