காதலிங்க... ஸ்கிரிப்ட் எழுதுங்க...!

Bookmark and Share

காதலிங்க... ஸ்கிரிப்ட் எழுதுங்க...!

இன்றைய 40 வயதைக் கடந்த இயக்குனர்கள் அனைவருமே அவரவர் இளமைப் பருவத்தில் கண்டிப்பாக காதலித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியே காதலிக்கவில்லை என்றாலும் அவர்களது வாழ்க்கையில் யாராவது ஒரு பெண் கடந்து போயிருக்க வாய்ப்புண்டு.

அந்தக் காலத்தில் மொபைல் போன்கள், இணையதளங்கள், சாட்டிங் வசதிகள் இல்லாத போது, அவர்கள் காதலுக்குக் கை கொடுத்த ஒரே விஷயம் காதல் கடிதங்கள்தான். அப்போதெல்லாம் காதல் கடிதங்கள் எழுதுவதே ஒரு கலை.

அது அனைவருக்கும் வந்துவிடாது. அப்படி அந்தக் காலத்தில் தான் எழுதி எழுதி சேர்த்து வைத்த காதல் கடிதங்கள்தான், இன்று தன்னுடைய படங்களில் இடம் பெறும் வசனங்களாக மாறிவிட்டது என்று இயக்குனர் கௌதம் மேனன் சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படம் வரை கௌதம் மேனன் படங்களின் காதல் காட்சிகளும், வசனங்களும் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒரு காலத்தில் தான் காதலித்த பெண் ஒருவர் நான் எழுதிய கடிதங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

அது மட்டுமல்ல கல்லூரி காலங்களில் பலரின் காதலுக்கு நான் உதவியாக இருந்திருக்கிறேன். அந்த அனுபவங்கள்தான் என் படங்களில் வெளிப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றிய படம் ஒன்றை இயக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளாராம். ஆனால், அது கண்டிப்பாக மெசேஜ் சொல்லும் படமாக மட்டும் இருக்காது என்கிறார். அதனால், இன்றைய இளைஞர்களே காதல் கடிதங்களை எழுதுங்கள், இன்னும் பத்து வருடங்கள் கழித்து கதை எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions