கவுதம் மேனனுக்காக காத்திருந்த பாட்டு

Bookmark and Share

கவுதம் மேனனுக்காக காத்திருந்த பாட்டு

இயக்குனர் கவுதம் மேனன் திரைப்படங்களை நேரேட் செய்வதற்கு பின்னணி குரல் கொடுப்பார். அவரது படங்களுக்கு மட்டுமல்லாது மற்ற படங்களுக்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவர் ஒரு பாடகரும்கூட என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. விண்ணைத் தாண்டி வருவாயா பாடல் வெளியீட்டு விழாவிலும், இன்னும் சில விழாக்களிலும் பாடியிருக்கிறார். தற்போது முதன் முறையாக திரைப்படத்திலும் பாடியிருக்கிறார்.

கவுதம் மேனனின் நண்பரான ராதாமோகன் இயக்கி வரும் உப்புகருவாடு படத்தில், கவுதம் மேனன் பாடியிருக்கிறார். படத்திற்கு இசை அமைக்கும் ஸ்டீவும், கவுதமனின் நண்பர்தான்.

வாழ்க்கையை கொண்டாடும் விதமான ஒரு ஜாலியான பாட்டு படத்தில் வருகிறது. இதனை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். இந்த பாடலை கவுதம் மேனன் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரை பாடக் கேட்டார்கள்.

அப்போது அவர் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் பாட முடியவில்லை. இதனால் இசை அமைப்பாளர் ஸ்டீவ் பாடி, அந்த பாடல் காட்சி படமாக்கவும் பட்டுவிட்டது.

இந்த நிலையில் கவுதம் மேனன் இப்போது நான் ஃப்ரீயாத்தான் இருக்கிறேன் வேணும்னா பாடித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே இசை அமைப்பாளர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஒரே இரவில் பாடிக் கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions