'என்னை அறிந்தால்' பற்றி மனம் திறக்கும் - கவுதம் மேனன்

Bookmark and Share

'என்னை அறிந்தால்' பற்றி மனம் திறக்கும் - கவுதம் மேனன்

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷாக படம் எடுக்கும் இயக்குனர்களில், கவுதம் மேனனுக்கு முக்கிய இடம் உண்டு. 'காக்க காக்க, வேட்டையாடு விளையாடு' என, வெற்றியின் உச்சத்துக்கு சென்ற அவர், 'நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம்' என, தோல்வியின் வீழ்ச்சிக்கு சென்றார்.

தடுமாறி நின்ற கவுதமை சிலர், முதுகில் குத்தி மேலும் தடுமாறச் செய்தனர். 'என்னை அறிந்தால்' மூலம், மீண்டும் புகழின் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். அந்த படத்தின் அனுபவம் குறித்து, அவரிடம் பேசியதிலிருந்து...

'என்னை அறிந்தால்' எந்த மாதிரியான படம்?

உணர்வுப்பூர்வமான ஆக் ஷன் படம். இன்னும் சொல்ல வேண்டுமானால், பெண்கள், தியேட்டர் வருவது வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அவர்களை மீண்டும் தியேட்டர்களை நோக்கி வரச் செய்யும் வகையில், பெண்களுக்கு மிகவும் பிடித்த படமாக இதை எடுத்துள்ளோம். படம் முடிந்து வெளியில் வரும்போது, ஒரு 'பீல்' இருக்கும்.

இந்த கதையில் அஜீத் எப்படி?

இந்த கதையே, முழுக்க முழுக்க அஜீத்தை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை தான். சில தோல்விகளுக்கு பின் இயக்கும் படம் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் கவனமாக செதுக்கியிருக்கிறேன். அஜீத் சார் கூடவே இருந்து, அவர் ஸ்டைல், மேனரிசம் இப்படி எல்லாவற்றையும் மெருகேற்றினோம்.

அஜீத்திடம் பிடித்தது?

அவரின் ரசிகர்களை மனதில் வைத்து படம் பண்ணலாம் என்று தான், முதலில் தோன்றியது. இதை அவரிடம் கேட்டபோது, 'அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம். வழக்கமாக நீங்கள் எப்படி பண்ணுவீங்களோ, அதேபோல் பண்ணிவிட்டு, அந்த கதைக்குள் என்னை கொண்டு வாங்க' என, கூறிவிட்டார். அவரின் இந்த பண்பு, என்னை பிரமிக்க வைத்தது.

படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்சீன் எடுத்துள்ளதாக...

அப்படி எல்லாம் எதுவும் இல்லை; இது தவறான தகவல். ஒரே ஒரு கிளைமாக்ஸ் தான் எடுத்துள்ளோம்.

'என்னை அறிந்தால்' என்ற தலைப்பு, ஏதோ ஒரு 'ஈகோ'வை சொல்ற  மாதிரி இருக்கே?

ஈகோ எதுவும் இல்லை. பல தலைப்புகளை யோசித்து, கடைசியாகத் தான், இதை தேர்வு செய்தோம். இதற்கு, அஜீத் சம்மதிப்பாரா என்று பயந்தோம்; தயாரிப்பாளரும் பயந்தார். ஆனால், கதைக்கு பொருத்தமான தலைப்பு என்பதால், அஜீத் இதை ஏற்றுக் கொண்டார். அஜீத்துக்கும், உங்களுக்கும் தகராறு... (கேள்வியை முடிக்கும் முன் குறுக்கிட்டு) இதில், ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. அப்படி இருந்திருந்தால், இந்த படத்தை முடித்திருக்கவே முடியாது. படம் தாமதமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. படம் தரமாக இருக்க வேண்டும் என்பதால் தான், இந்த தாமதம். அவர் என்  மேல் கோபப்பட்டிருந்தால்,  தொடர்ந்து கிட்டத்தட்ட, 22 மணி நேரம், 'டப்பிங்' பேச வந்திருக்க மாட்டார்.  'நிறைய படங்களுக்கு என் சக்தியை கொடுத்திருக்கேன்; ஆனால், இந்த படம் என்ன  கொஞ்சம் உழைக்க வைக்குது' என்றார். இது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

படத்தின் டீசரை நடு ராத்திரியில் வெளியிட்டு, ரசிகர்களை துாங்க விடாமல் செய்து விட்டீர்களே...

படத்தின் தயாரிப்பாளர் பாபா பக்தர் என்பதால், படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றை, புதன் கிழமை இரவு முடிந்து, வியாழக்கிழமை அதிகாலை 12:00 மணிக்கு வெளியிட வேண்டும் என, ஆசைப்பட்டார். இது தான் உண்மையான காரணம். சென்டிமென்ட் காரணமாக இப்படி நடந்தது; மற்றபடி, ரசிகர்களின் துாக்கத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions