கவுதம்மேனன் - தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது

Bookmark and Share

கவுதம்மேனன் - தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் சிம்பு - மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

இப்படத்தை தொடர்ந்து கவுதம் கவுதம் மேனன் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது இப்படத்திற்கு தலைப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘என்மேல் பாயும் தோட்டா’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

ரொமான்ஸ் கலந்த காதல் படமாக உருவாகவுள்ள இப்படத்தை குறுகிய நாட்களில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வருகிற மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் ‘மிரட்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதுமட்டுமில்லாமல், துரை.செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். 

அதன்பிறகு, கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனுஷ் கைவசம் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’, ஹாலிவுட் படமொன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ
பிக்பாஸ் வீட்டிற்குள் படுத்துக்கொண்டு திடீரென கண்ணீர் வீட்டு அழுத யாஷிகா! பதட்டமடைந்த சக போட்டியாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions