கவுதம் மேனன் - தனுஷ் கூட்டணியில் யுவன்!

Bookmark and Share

கவுதம் மேனன் - தனுஷ் கூட்டணியில் யுவன்!

சிம்புவை வைத்து கவுதம் மேனன் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையிலேயே தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும் இயக்க ஆரம்பித்து விட்டார்.

இதில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ஆனால், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று கவுதம் மேனன் அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

இதுவரை கவுதம் மேனன் இயக்கிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தான் இசையமைத்து வந்தார்கள். நடுவில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்திற்கு மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.

தற்போது கவுதம் மேனன், யுவன் சங்கர் ராஜாவுடன் புது கூட்டணி வைக்க இருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions