லிங்குசாமியை கவர்ந்த இயக்குனர் கெளதம்மேனன்!

Bookmark and Share

லிங்குசாமியை கவர்ந்த இயக்குனர் கெளதம்மேனன்!

2001-ல் ஆனந்தம் படம் மூலம் இயக்குனரானவர் லிங்குசாமி. அதையடுத்து, ரன், சண்டக்கோழி, ஜி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் என பல படங்களை இயக்கிய அவர், தற்போது தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் மற்ற இயக்குனர்களுக்கும் படவாய்ப்பு கொடுத்து வருகிறார். இவருக்கு தற்போதைய இயக்குனர்களில் கெளதம் மேனனின் படங்கள் ரொம்ப பிடிக்குமாம்.

அதுபற்றி அவர் கூறுகையில், நான் சினிமாவுக்குள் உதவி இயக்குனராக வேலை செய்ய வந்தபோது கே.பாக்யராஜ் சார் தான் எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனராக இருந்தார். அதனால் அவரிடம் வேலை செய்ய முயற்சி செய்தேன்.

அதனால் அவரது பார்வையில் படுமாறு சென்று நிற்பேன். ஆனால், அவர் நெருங்கி வரும்போது காதலியை பார்த்து காதலன் தடுமாறுவது போன்று நான் பயந்து மறைந்து நின்று கொள்வேன்.

அந்த அளவுக்கு அவர் மீது கிரேஸ் இருந்தது. விளைவு, என்னால் அவரிடத்தில் வேலை பார்க்க முடியவில்லை. அதன்பிறகு மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனராக வேலை பார்க்கும் ஆர்வத்தில் முயற்சி செய்தேன்.

அவரது அலுவலகத்திற்குள் செல்லவே முடியவில்லை. ஆனால் இந்திரா படத்தை சுகாசினி மேடம் இயக்கயிருந்தபோது அவரிடம் சான்ஸ் கேட்டேன். அதுகூட அப்படியே மணிரத்னம் சாரிடம் உதவியாளராகி விடலாம் என்ற நோக்கத்தில்தான்.

ஆனால் 10 நாள் கழித்து வருமாறு சுகாசினி மேடம் கூறி அனுப்பினார். அந்த நேரம்தான் ஏ.வெங்கடேஷ் சாரிடத்தில் மகாபிரபு படத்தில் உதவியாளராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

விளைவு, கே.பாக்யராஜ், மணிரத்னம் என்ற என்னை அதிகம் பாதித்த இயக்குனர்களிடம் என்னால் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்படி சொல்லும் லிங்குசாமி, இப்போது நான் ஒரு உதவி இயக்குனராக சினிமாவுக்குள் வந்திருந்தால், கெளதம் மேனனிடம் தான் உதவியாளராக வேலை பார்க்க ஆசைப்பட்டிருப்பேன்.

காரணம், அவரது படங்கள் ரொம்ப ஸ்டைலிசாக இருக்கிறது. அதற்காகவே அவர் படங்களை ஒரு ரசிகனாக பார்த்து ரசித்து வருகிறேன் என்கிறார் கெளதம்மேனன்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions