ராஜதந்திரம் படத்துக்கு 7 கோடி கேட்ட கௌதம் மேனன்!

Bookmark and Share

ராஜதந்திரம் படத்துக்கு 7 கோடி கேட்ட கௌதம் மேனன்!

நடுநிசி நாய்கள் படத்தில் ஹீரோவாக நடித்த வீரா தயாரித்து ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் - ராஜதந்திரம். ஆர்வக்கோளாறில் எக்கச்சக்கமாக செலவு பண்ணி ராஜதந்திரம் படத்தைத் தயாரித்துவிட்டார் வீரா.

ஆனால் படம் பிசினஸ் ஆகவில்லை. பின்னர் அவரது வெல்விஷரான கௌதம் மேனனின் ஃபோட்டன் கதாஸ் நிறுவனமும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ராஜதந்திரம் படத்தை வாங்கின.

லோபட்ஜெட் படங்களை தயாரிப்பவர்கள் படத்தை வெளியிட முடியாமல் கஷ்டப்படுவது தெரிந்தால் அவர்களை அணுகி, 15 லட்சம் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிட்டு வருகிறது வைப்ரண்ட் மூவீஸ் என்ற விநியோக நிறுவனம்.

இந்த நிறுவனம் ராஜதந்திரம் படத்தை வெளியிட விரும்பி கௌதம் மேனனை அணுகினார்களாம். வழக்கம்போல் 15 லட்சம் கொடுத்தால் தாங்களே படத்தை ரிலீஸ் செய்ய உதவுவதாக சொல்ல, கௌதம் மேனன் மறுத்துவிட்டாராம்.

நானே படத்தை நேரடியாக ரிலீஸ் செய்யுமளவுக்கு எனக்கு நெட்வொர்க் இருக்கிறது. உங்களுக்கு படம் வேண்டும் என்றால் தமிழக தியேட்டர்களில் ரைட்ஸ் மட்டும் 7 கோடி என்று விலை சொன்னாராம்.

கௌதம் சொன்ன விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வைப்ரண்ட் மூவீஸ் பேசாமல் எழுந்துவந்துவிட்டனர். தற்போது ராஜதந்திரம் படம் வெளியாகி நல்ல ரிப்போர்ட் இருந்தும் போதிய பப்ளிசிட்டி இல்லாமல் படம் தோல்வியடைந்துவிட்டது.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions