அடுத்த த்ரிஷாவை உருவாக்கும் கெளதம்மேனன்!

Bookmark and Share

அடுத்த த்ரிஷாவை உருவாக்கும் கெளதம்மேனன்!

கடந்த சில ஆண்டுகளாகவே மந்தமான நிலையில் இருக்கும் சிம்பு, இதை தொடர விடக்கூடாது என்று வரிந்து கட்டத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், இது நம்ம ஆளு படத்தை முடித்து விட்ட அவர், தற்போது கெளதம்மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா பட வேலைகளில் இறங்கி விட்டார்.

இந்த படம் அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்குவதற்கு முன்பே சிம்புவை வைத்து சட்டென்று மாறுது வானிலை என்ற பெயரில் கெளதம்மேனன் இயக்கிய படம்தான்.

அந்த படத்தை குறுகிய காலத்திற்குள் எடுத்து வெளியிட வேண்டும் என்பதுதான் கெளதம்மேனனின் அப்போதைய திட்டமாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அஜீத் உடனடியாக அழைத்ததால், சிம்பு படத்தை நிறுத்தி வைத்து விட்டு என்னை அறிந்தால் படத்தை தொடங்கினார் கெளதம்.

அப்படம் எதிர்பார்த்தபடியே ஹிட்டானதால் இப்போது புதிய எனர்ஜியுடன் சிம்பு படத்தை விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கியிருக்கிறார் கெளதம்மேனன், அப்படம் தனக்கும், சிம்புவுக்கும் இன்னொரு விண்ணைத்தாணடி வருவாயா போன்று அமைய வேண்டும் என்று ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

மேலும், இந்த படத்திற்கும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து வைத்திருந்த பல்லவி சுபாஷையே மீண்டும் நடிக்க வைத்திருக்கும் கெளதம்மேனன், அவரை அடுத்த த்ரிஷாவாக உருவாக்க வேண்டும் என்றும் த்ரிஷாவை மனதில் கொண்டு அவரது கெட்டப் மற்றும் கேரக்டரையும் உருவாக்கியிருக்கிறாராம்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions