விஜய் உடன் இணைகிறாரா கௌதம் வாசுதேவ் மேனன்?

Bookmark and Share

விஜய் உடன் இணைகிறாரா கௌதம் வாசுதேவ் மேனன்?

சில வருடங்களுக்கு முன் விஜய்யை வைத்து, யோஹன் : அத்தியாயம் ஒன்று என்ற படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்குவதாக இருந்தது. அப்படத்தின் போட்டோசெஷன்  நடத்தப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டநிலையில், யோஹன் : அத்தியாயம் ஒன்று படம் ட்ராப்பானது.

கௌதம் வாசுதேவ் மேனன் கதை சொல்லாமல் காலம் தாழ்த்தினார் என்றும், அதனால் கடுப்பான விஜய் முதலில் கதையை ரெடி பண்ணிவிட்டு வாருங்கள்.. பிறகு பார்க்கலாம் என்று அந்தப்படத்தை நிராகரித்தார் என்றும் அப்போது சொல்லப்பட்டது.

இந்தத் தகவலை விஜய் தரப்பினரே மீடியாக்களில் செய்தியாக வர வைத்தனர். அப்போது தன் தரப்பு பற்றி கௌதம் வாசுதேவ் மேனன் வாயைத் திறக்கவில்லை. இந்நிலையில் யோஹன் : அத்தியாயம் ஒன்று படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

யோஹன் : அத்தியாயம் ஒன்று படத்தின் கதை பெரும்பாலும் லண்டனில் நடப்பது மாதிரிதான் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி வைத்திருந்தாராம்! லண்டனில் நடப்பது மாதிரியான கதை என்பதால் லாஜிக் அடிப்படையில் படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் இடம்பெறுவதுபோல் வசனம் எழுதி இருந்தாராம்.

இதை தன்னுடைய ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் விஜய். இது தொடர்பான மன வருத்தத்திலேயே விஜய் அந்தப்படத்திலிருந்து விலகினாராம்.

பிரபல மலையாள பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் இத்தனை தகவல்களையும் வெளிப்படையாகப் பேசி உள்ள கௌதம் வாசுதேவ் மேனன்,  யோஹன் : அத்தியாயம் ஒன்று கதை கைவிடப்படவில்லை என்றும், அந்த கதையில் சில மாற்றங்களை செய்து விரைவில் படமாக்க இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சொல்வது உண்மையா என்பதை விஜய்தான் உறுதிப்படுத்த வேண்டும்...!


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions