'யோஹன்'ஐ தூசு தட்டுகிறாரா கௌதம் மேனன்...?

Bookmark and Share

'யோஹன்'ஐ தூசு தட்டுகிறாரா கௌதம் மேனன்...?

கௌதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படம் தயாரிப்பாளரைப் பொறுத்தவரை வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. 'துருவ நட்சத்திரம்' படத்தின் பிரச்சனையில் சூர்யா ஏமாற்றிய நிலையிலும் கௌதம் மேனன் மீண்டும் எழுந்து ஒரு அஜித் துணையுடன் வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டார்.

'என்னை அறிந்தால்' படத்திற்காக நிறுத்தி வைத்திருந்த சிம்பு படத்தை மீண்டும் இயக்க ஆரம்பித்துவிட்டார். 'அச்சம் என்பது மடமையடா' என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள்.

இதனிடையே, கௌதம் மேனன் , விக்ரம் நடிக்கும் படம் ஒன்றை இயக்கப் போவதாகவும், அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் '10 எண்ணுறதுக்குள்ளே' படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து 'அரிமா நம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்குப் பிறகுதான் கௌதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளார் என்கிறார்கள். அதற்குள் கௌதம் மேனன் சிம்பு நடிக்கும் படத்தையும் இயக்கி முடித்து விடுவாராம். 'யோஹன், அத்தியாயம் ஒன்று' படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சில வருடங்களுக்கு முன் விளம்பரப்படுத்தப்பட்டு அதன் பின் அந்தப் படம் அப்படியே நின்று போனது.

அதைத்தான் தூசி தட்டி மீண்டும் விக்ரமை வைத்து கௌதம் இயக்கப் போகிறார் என்கிறார்கள். கௌதம் படத்தைப் பொறுத்தவரையில் விளம்பரப்படுத்தினாலும்,  பூஜை போட்டு ஆரம்பித்தாலும் கூட அந்தப் படங்கள் திடீரென கைவிடப்பட்டுவிடும்.

அதனால், இந்த தகவலை ஷுட்டிங் போகும் வரை கூட நம்பவே முடியாது என சிலர் கோலிவுட்டில் கிண்டலடிக்கிறார்கள். 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions