காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது

Bookmark and Share

காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது

காவல் துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும் இயக்குநர் கவுதமன் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டார்.

இயக்குனர் கவுதமனுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு பிரச்சினையின் ஆரம்பத்திலேயே கவுதமன் தீவிரமாக போராடினார்.

அவனியாபுரத்தில் போலீசார் இவர் மீதும் தடியடி நடத்தியிருந்தனர்.இந்நிலையில் சென்னை, மெரினா உள்ளிட்ட இடங்களில் கடந்த திங்கள்கிழமை போலீசார் தடியடி நடத்தி ஜல்லிக்கட்டு போராட்டக்கார்ரகளை கலைத்ததற்கு எதிராக இன்று கவுதமன் போராட்டம் நடத்தியிருந்தார்.

இப்போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.


Post your commentAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions