கெளதமிக்கு விருது கிடைக்குமா?

Bookmark and Share

கெளதமிக்கு விருது கிடைக்குமா?

2006-ல் சாசனம் என்ற படத்தில் நடித்த பிறகு தற்போது கமல் நடிக்கும் பாபநாசம் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துக்கொண்டிருக்கிறார் கெளதமி. ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினார்.

தான் நடித்த படங்களில் பெரும்பாலும் தனக்கான ஆடை வடிவமைப்புகளில் ஆரம்பத்தில் இருந்தே கவனம் செலுத்தி வந்த கெளதமி, தசாவதாரம் படத்தில் காஸ்டியூம் டிசைனராக கமலினால் நியமிக்கப்பட்டார்.

பத்து விதமான கெட்டப்புகளில் நடித்த கமலுக்காக அவர் வடிவமைத்த ஆடைகள் மிகச்சிறப்பாக இருந்தது. அதனால் அந்த படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விஜய் டிவி விருது கெளதமிக்கு கிடைத்தது.

அதனால் அதிக உற்சாகமடைந்த கெளதமி, இப்போது கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்திலும் காஸ்டியூம் டிசைனராக ஒர்க் பண்ணியிருக்கிறார். 8ம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டு என இரண்டு காலகட்டத்து கேரக்டர்களில் கமல் நடிப்பதால் அந்தந்த காலகட்டத்தில் மக்கள் பயன்படுத்திய ஆடை வடிவமைப்புகளை அபபடியே கண்முன்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாராம் கெளதமி. அதனால் இந்த முறை கெளதமிக்கு அரசு விருதுகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.


Post your comment





Related News
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
என்னது பாலா படத்தில் என் மகளா? அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கௌதமியின் செயல்
‘உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’… ஹீரோக்கள் வேதனை! கவுதமி புடிவாதம்..
ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி
கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions