வலுவான வேடங்களில் நடிப்பேன்: கவுதமி

Bookmark and Share

வலுவான வேடங்களில் நடிப்பேன்: கவுதமி

மகேந்திரன் இயக்கத்தில் ரிலீசான ‘சாசனம்’ படத்தில் நடித்த கவுதமி, பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இதற்கிடையே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டார்.

8 வருட இடைவெளிக்குப் பிறகு ‘பாபநாசம்’ மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள அவர் கூறியதாவது: கமலுடன் ஜோடி சேரும் வாய்ப்பு என்ற ஒரே விஷயம்தான், என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தது. மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ படத்தைப் பார்த்தபோது, அதில் வந்த குடும்பத்தலைவி கேரக்டர் என்னைப் பெரிதும் கவர்ந்தது.

அந்த வேடம் எனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் நம்பினார். எனக்கேற்ற கேரக்டர் என்று இயக்குனர்கள் நம்பினால், அந்த கேரக்டரில் நடிக்கத் தயார். ஏதோ வந்து போகும் அம்மாவாகவோ, சகோதரியாகவோ நடிக்க விருப்பம் இல்லை.

நடிப்புத்திறமைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள வலுவான கேரக்டராக இருந்தால் மட்டுமே புதிய வாய்ப்புகளை ஏற்பேன். என் மகள் எப்போது நடிக்க வருகிறார் என்று கேட்கிறார்கள்.

அவள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறாள். நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை. தன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்ய, இன்னும் அவளுக்கு கால அவகாசம் இருக்கிறது.


Post your comment





Related News
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
என்னது பாலா படத்தில் என் மகளா? அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கௌதமியின் செயல்
‘உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’… ஹீரோக்கள் வேதனை! கவுதமி புடிவாதம்..
ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி
கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions