என் ரத்தத்தில் ஊறிய சினிமாவை விட்டு என்னால் விலக முடியாது: நடிகை கெளதமி

Bookmark and Share

என் ரத்தத்தில் ஊறிய சினிமாவை விட்டு என்னால் விலக முடியாது: நடிகை கெளதமி

'பாபநாசம்' படத்துக்குப் பின் கவுதமி தற்போது மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கும் 'நமது' திரைப்படம் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின் மோகன்லாலுடன் இணைந்து கவுதமி நடித்திருக்கிறார்.

'நமது' திரைப்படம் மற்றும் தனது திரையுலக வாழ்க்கை குறித்து கவுதமி கூறும்போது ''இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி என்னைத் தொடர்பு கொண்டு ‘நமது’ படத்தின் கதையைக் கூறினார். படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். 'பாபநாசம்' படத்தைப் பார்த்துத்தான் அவர் என்னை இந்தப் படத்தில் நடிக்கக் கூப்பிட்டாரா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.

ஆனால் படத்தின் கதையை எழுதும்போதே என்னை மனதில் வைத்துத்தான் எழுதியதாக இயக்குநர் தெரிவித்தார். இப்படத்தின் கதையைக் கேட்டு மோகன்லாலும் நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது 'நமது' படத்தின் முழுப்பணிகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி விட்டது. தமிழ், தெலுங்கில் நானே டப்பிங் பேசியிருக்கிறேன்.

நான்கு தலைமுறைகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய வன்முறை இல்லாத படமாக 'நமது' இருக்கும். நான்கு கதாப்பத்திரங்களை சுற்றி படத்தின் கதையை இயக்குநர் அமைத்திருக்கிறார். அந்த நால்வரும் சந்திக்கும்போது படத்தின் கிளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும். சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கின்றனர்.

இதுவரை 120 படங்களுக்கும் அதிகமாக நடித்து விட்டேன் என்றாலும் எனக்கு ஏற்ற மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன். சினிமாவை விட்டு எங்கும் போக முடியாது. ஏனெனில் அது என்னுடைய ரத்தத்திலேயே ஊறியது'' என்றார்.


Post your comment





Related News
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
என்னது பாலா படத்தில் என் மகளா? அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கௌதமியின் செயல்
‘உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’… ஹீரோக்கள் வேதனை! கவுதமி புடிவாதம்..
ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி
கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions