மெல்லிசைக்கு பிறகே புதிய படம்! வெயிட் பண்ணும் காயத்ரி

Bookmark and Share

மெல்லிசைக்கு பிறகே புதிய படம்! வெயிட் பண்ணும் காயத்ரி

18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பொன்மாலைப்பொழுது, ரம்மி, மத்தாப்பு ஆகிய படங்களில் நடித்தவர் காயத்ரி. இந்த படங்களில் விஜயசேதுபதியுடன் இணைந்து அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால் அந்த படத்தில் காயத்ரி கடைசி ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். அதேசமயம், அவர் படம் முழுக்க வந்து நடித்த படங்கள் தோல்வியடைந்து அவரை ஏமாற்றி விட்டன. இந்த நிலையில், தற்போது உலா, மெல்லிசை படங்களில் நடித்து முடித்துள்ளார் காயத்ரி. அதையடுத்து இன்னமும் அவர் எந்த புதிய படத்திலும் கமிட்டாகவில்லை.

இதுபற்றி காயத்ரியைக் கேட்டபோது, உலா படம் முன்பே முடிந்து விட்டது. விஜயசேதுபதியுடன் மூன்றாவது முறையாக நான் இணைந்து நடித்துள்ள மெல்லிசை படம் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த படத்தில் நான் ஒரு பாடகியாக நடித்திருக்கிறேன்.

கதையே என்னை சுற்றித்தான் அமைந்துள்ளது. அதனால் எனக்கு பர்பார்மென்ஸ் ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதோடு எனது ராசியான ஹீரோவான விஜயசேதுபதியுடன் நடித்திருப்பதால் இப்படம் வெற்றி பெற்று எனது மார்க்கெட்டில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறும் காயத்ரியை, கிளாமர் கதைகளில் நடிக்க சிலர் கேட்கிறார்களாம்.

ஆனால் அவருக்கு அப்படி நடிப்பதில் உடன்பாடில்லையாம். அதனால் மெல்லிசை வந்த பிறகு தனக்கு நல்ல படங்கள் கிடைக்கும் என்று அந்த படத்தின் ரிலீசுக்காக தற்போது வெயிட்டிங்கில் இருக்கிறாராம் காயத்ரி.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions