பெங்களூருக்கு ஓட்டம் பிடித்த காயத்ரி!

Bookmark and Share

பெங்களூருக்கு ஓட்டம் பிடித்த காயத்ரி!

18 வயசு படத்தில் அறிமுகமான காயத்ரிக்கு, விஜயசேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் நல்லதொரு என்ட்ரியை கொடுத்து. அந்த படத்தில் ஒரேயொரு காட்சியில் நடித்தபோதும் அவர் எங்கு சென்றாலும் ப்பா ப்பா -என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்யத் தொடங்கினர்.  

அதன்பிறகு பொன்மாலைப்பொழுது, மத்தாப்பு, ரம்மி ஆகிய படங்களில் நடித்த காயத்ரி, தற்போது உலா, மெல்லிசை என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் மெல்லிசை படத்தில் மீண்டும் விஜயசேதுபதியுடன் இணைந்திருக்கிறார்.

கதைப்படி விஜயசேதுபதி இசையமைப்பாளராக நடிக்க, காயத்ரி பாடகியாக நடித்துள்ளார். இதையடுத்து காயத்ரிக்கு எந்த புதிய படமும் புக்காகவில்லை. ஆனபோதும் மெல்லிசை வெளியானால் தனக்கு ஏதாவது புதிய படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே தற்போதைக்கு அவரிடம் உள்ளது.

மேலும், பெங்களூர்வாசியான அவர், வேலைவெட்டி இல்லாமல் சென்னையில் இருக்க போரடிப்பதால், இப்போது பெங்களூரில் முகாமிட்டிருக்கிறார். ஏற்கனவே விஜயசேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு புதிய படங்கள் கிடைத்த மாதிரி இந்த மெல்லிசை படத்துக்கு பிறகும் படங்கள் கிடைத்தால்தான் மறுபடியும் அவர் சென்னைக்கு விஜயம் செய்வாராம்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions