தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

Bookmark and Share

தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் ரத்த காயத்தோடு இருக்கும் வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், போலீசாருக்கு ஆதரவான கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம்.

ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.

அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்” என்று பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது. 

தூத்துக்குடியில் போலீசார் யாரும் சாகவில்லை. பொதுமக்கள்தான் பலியாகி உள்ளனர். உங்களிடம் பேசி பயனில்லை” என்றெல்லாம் காயத்ரி ரகுராமை கண்டித்து பலர் கருத்து பதிவிடுகிறார்கள்.

இதேபோல் நடிகை கார்த்திகா, “தூத்துக்குடியில் சில கலகக்கார குழுக்களால்தான் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது” என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.
நீங்கள் உளவு துறையில் பணியாற்றுகிறீர்களா? துப்பாக்கி சூட்டில் பலியான மாணவரும், மாணவியும் கலகக்காரர்களா? தமிழக மக்கள் போராட்டம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவருக்கு பலர் பதிலடி கொடுத்து கண்டித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள், பொங்கி எழுந்த காயத்திரி - வைரலாகும் புகைப்படம்.!
எதுக்கு இந்த உடை, கேவலமாக இல்லையா? பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
ஹாசினியை கொன்றுவிட்டு பின் தன் தாயை கொன்றவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? திட்டிதீர்த்த காயத்ரி ரகுராம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions