நடிக்கும் முடிவை கைவிட்ட ஜெனிலியா

Bookmark and Share

நடிக்கும் முடிவை கைவிட்ட ஜெனிலியா

மீண்டும் நடிக்கும் முடிவை கைவிட்டார் ஜெனிலியா.சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா.

இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். கடந்த ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு முன், ‘மீண்டும் நடிப்பீர்களா?‘ என்று ஜெனிலியாவிடம் கேட்டபோது, ‘மனதுக்கு பிடித்த கேரக்டர் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றி முடிவு செய்வேன்‘ என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் குழந்தை பிறந்ததையடுத்து அவரது முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ' இப்போது எனக்கு குடும்ப பொறுப்புகள் அதிகமாகிவிட்டது. அதனால் மீண்டும் நடிக்க வரும் நிலையில் நானில்லை. குழந்தை வளர்ந்த பிறகு வேண்டுமானால் நடிப்பு பற்றி யோசிக்கலாம்' என்றார் ஜெனிலியா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions