பழம்பெரும் சினிமா தியேட்டர்களை பாதுகாக்கும் ஜெர்மன் கலாச்சாரத்துறை

Bookmark and Share

பழம்பெரும் சினிமா தியேட்டர்களை பாதுகாக்கும் ஜெர்மன் கலாச்சாரத்துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜெர்மன் கலாச்சாரத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டு கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்புவது இதன் வேலை.

தற்போது இந்த அமைப்பு ஜெர்மனியில் இருந்து 25 ஓவியர்களை வரவழைத்து சென்னையில் உள்ள சுவர்களில் ஓவியங்களை வரைந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை சத்யம் தியேட்டர் சுவரில் சினிமா தொடர்புடைய ஓவியங்களை வரைந்து வருகிறது.

அதோடு சென்னை ஜெர்மன் கலாச்சாரத்துறை தமிழ்நாட்டில் உள்ள பழமையான தியேட்டர்களை புகைப்படம் எடுத்து அதனை பாதுகாத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த ஜெர்மன் புகைப்பட கலைஞர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் வடிவமைப்பு மிகவும் கவர்ந்திருக்கிறது.

அப்போது அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வித்தியாசமான கட்டிட அமைப்புகள் கொண்ட 30 தியேட்டர்களை புகைப்படம் எடுத்தனர். இந்த படங்களை இப்போது ஜெர்மன் கலாச்சரத்துறை கண்காட்சியாக வைத்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions