கெத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Bookmark and Share

கெத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

உதயநிதி நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை அடுத்து எமி ஜாக்சனுடன் இணைந்து ‘கெத்து’ என்னும் படத்தை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக தயாரித்தும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை ‘மான் கராத்தே’ திரைப்படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி வருகிறார். இசையமைக்கும் பணியை ஹாரிஸ் ஜெயராஜ் செய்துவருகிறார்.

அப்பாவிற்கும் மகனுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் குடும்ப சித்திரமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இதில் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இதில் எமி ஜாக்சன் பிராமண பெண்ணாக மடிசார் கட்டி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் உதயநிதியை வித்தியாசமான தோற்றத்தில் காண்பித்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Post your comment





Related News
கெத்து - நடையில் இல்லை, இதில் தான்! அஜித் பற்றி பிரபல நடிகர்
கெத்து படத்துக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கெத்து படத்துக்கு வரிவிலக்கு கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
கெத்து படத்துக்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி கோர்ட்டில் வழக்கு
கெத்து முதல் 4 நாள் வசூல் விவரம் வெளிவந்தது!
கெத்து படத்தின் முதல் 4 நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்
கெத்து விளம்பரங்களில் எமிஜாக்சன் நீக்கியது ஏன்?
உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் கெத்து படத்தின் முன்பதிவு தொடங்கியது!
பொங்கல் திருநாளுக்கு விருந்தாக 4 படங்கள் வெளியாகின்றன!
கெத்து படத்தில் சந்தானம் நடிக்காததற்கு விளக்கமளிக்கும் உதயநிதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions