கெத்து விளம்பரங்களில் எமிஜாக்சன் நீக்கியது ஏன்?

Bookmark and Share

கெத்து விளம்பரங்களில் எமிஜாக்சன் நீக்கியது ஏன்?

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள கெத்து படம் பொங்கலுக்கு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். லண்டனை சேர்ந்த எமிஜாக்சன் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பீட்டா அமைப்பில் அங்கம் வகிக்கிறார்.

அதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் எமி ஜாக்சனுக்கு எதிராக தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்றுவருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் எமி ஜாக்சன் நடித்த கெத்து படம் பொங்கள் அன்று திரைக்கு வந்தது. எமிஜாக்சனை எதிர்க்கும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களினால் கெத்து படத்துக்கு பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக, கெத்து விளம்பரங்களில் மாற்றம் செய்துள்ளனர்.

அதாவது எமிஜாக்சனை இருட்டடிப்பு செய்துவிட்டு உதயநிதி, விக்ராந்த், சத்யராஜ் ஆகியோர் இருப்பது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions