கெத்து படத்துக்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி கோர்ட்டில் வழக்கு

Bookmark and Share

கெத்து படத்துக்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி கோர்ட்டில் வழக்கு

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கேட்டு தமிழக அரசிடம் ரெட் ஜெயின்ட் மூவி நிறுவனம் விண்ணப்பம் செய்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தமிழக அரசு, வரி விலக்கு அளிக்க மறுத்து கடந்த 14–ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், ரெட்ஜெயின்ட் மூவி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

‘வரி விலக்கு அளிக்க மறுத்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். கடந்த 14–ந் தேதி முதல் கெத்து படத்துக்கு வசூலித்த கேளிக்கை வரியை திருப்பித்தர அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி வாதிட்டார். மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions