கெத்து பட ரிலீஸுக்கு உதவுவாரா ஹாரிஸ் ஜெயராஜ்?

Bookmark and Share

கெத்து பட ரிலீஸுக்கு உதவுவாரா ஹாரிஸ் ஜெயராஜ்?

மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் வைத்து இயக்கியுள்ள படம் கெத்து. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

ரிஸ்ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட்டாகி பல வருடங்களாகிவிட்டதால் மிகவும் பின் தங்கி இருக்கிறார். அதன் காரணமாக அவருக்கு புதிய படங்களும் தேடி வரவில்லை.

இப்படியொரு சூழலில் கெத்து படப் பாடல்கள் ஹிட்டானால்தான் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் முன்னணிக்கு வருவார் என்ற நிலையில் சில தினங்களுக்கு முன் கெத்து பாடல்கள் வெளியானது.  

அவற்றில் தில்லுமுல்லு என்ற பாடல் ஹிட்டாகி ஐடியூனில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனால் ஹாரிஸ் ஜெயராஜ் உற்சாகமடைந்திருக்கிறார்.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை இம்மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.  

பட வேலைகள் முடிய கால தாமதமானதால் பட வெளியீட்டை தள்ளிப் போட்டார்கள்!  தற்போது பொங்கல் தினத்தில் கெத்து படத்தை வெளியிட தீர்மானித்துள்ளார் உதயநிதி.

ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதால் அதற்குள் ரீரெக்கார்டிங் வேலையை முடித்துக் கொடுக்கும்படி ஹாரிஸ் ஜெயராஜிடம் கூறி உள்ளனர். அவர் பின்னணி இசையை முடித்துக்கொடுத்தால்தான் கெத்து படம் பொங்கலுக்கு வரும் என்பதே தற்போதைய நிலவரம்...!


Post your comment





Related News
மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!
சிங்கம் 3 என்னை பாடலாசிரியராக்கியது! ஹாரிஸ் ஜெயராஜ்
விஜய்யால் ஏமாந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்
சூர்யாவை பெண்டு நிமித்திய ஹாரிஸ் ஜெயராஜ்!
இசைக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா ஹாரிஸ்?
மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஆல்பங்களை வெளியிடும் ஹாரிஸ் ஜெயராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions