கெத்து - சந்தானத்துக்குப் பதில் கருணாகரனை சேர்த்துக் கொண்ட உதயநிதி

Bookmark and Share

கெத்து - சந்தானத்துக்குப் பதில் கருணாகரனை சேர்த்துக் கொண்ட உதயநிதி

சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை. போதாததுக்கு அவரது காமெடி வேறு சாயம் இழந்து வருகிறது.

உதயநிதியைப் பொறுத்தவரை இவற்றையெல்லாம் தாண்டி, சந்தானத்தால்தான் உதயநிதி படம் ஓடுகிறது என்ற விமர்சனம் இருக்கிறது. இந்த அனைத்துப் பிரச்சனைக்கும் சர்வரோக நிவாரணியாக அமைந்திருக்கிறார் கருணாகரன்.

ஆம், உதயநிதியின் அடுத்தப் படம் கெத்துவில் சந்தானத்துக்குப் பதில் கருணாகரனை உதயநிதி ஒப்பந்தம் செய்துள்ளார். மான் கராத்தே திருக்குமரன் இயக்கும் இந்தப் படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயின். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

கெத்து என்ற பெயரை வேறொருவர் பதிவு செய்து வைத்திருந்ததால் வேறு பெயர் வைக்கப் போவதாக உதயநிதி கூறியிருந்தார். இப்போது கெத்து என்ற பெயரிலேயே பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.  


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions