கெத்து படத்துக்கு வரிவிலக்கு கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Bookmark and Share

கெத்து படத்துக்கு வரிவிலக்கு கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை ஐகோர்ட்டில், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் மனுவில், ‘உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ என்ற படத்தை தயாரித்துள்ளோம்.

கெத்து என்பது தமிழ் சொல் அல்ல என்று கூறி எங்கள் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கனவே நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தைதான். திருபுகழில் முருக கடவுளை பார்த்து பாடிய பாடலில் கெத்து என் வார்த்தை வருகிறது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் கேளிக்கை வரி விலக்கு கேட்டு விண்ணப்பித்த படிவத்தில்,

கெத்து என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் ‘ ’ என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே அது தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி வரி விலக்கு அளிக்கவில்லை.

இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்த நீதிபதி,

அன்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் நடத்தவும், தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


Post your comment





Related News
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்
விஜய்க்கு செய்த மாதிரி எனக்கும் உதவி பண்ணுங்க, பா.ஜ,க-வை சீண்டும் பிரபல நடிகர்.!
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions