போர்க்கப்பலை பற்றி ஹாலிவுட் தரத்தில் சொல்லும் காஸி

Bookmark and Share

போர்க்கப்பலை பற்றி ஹாலிவுட் தரத்தில் சொல்லும் காஸி

சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘காஸி’.

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ராணா டகுபதி ஹீரோவாகவும், டாப்ஸி ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல் நம் நாட்டின் மீது போர் தொடுக்க, அதை நம் நாட்டு வீரர்கள் எப்படி எதிர்க்கிறார்கள், எதிரிகளிடமிருந்து நம் நாட்டைக் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

இப்படத்தின் கதை முழுவதும் நீர்மூழ்கி கப்பல் சம்பந்தப்பட்டது என்பதால் பெரும்பாலான காட்சிகள் கடலிலும், கடலுக்கு அடியிலும் படமாக்கப்பட்டுள்ளன.

கடலில் எடுக்கப்பட்டவை மட்டுமல்ல படத்தில் வரும் அந்தக் கடலடிக் காட்சிகளும் ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தைத் தரும் என்கிறது படக்குழு.

இந்திய சினிமாவிலேயே ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இப்படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் தணிக்கை முடிந்து விட்டது. ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions