கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரான்

Bookmark and Share

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரான்

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரப்பரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ''ரத்திந்திரன் R பிரசாத்'' குறும்படத்தை படத்தை நிர்வாக தயாரிப்பு செய்துள்ளார் ..‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ (Swayer Corporations) என்ற இக்குறும்படம் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் 2015ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது.

முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப் பட்டுள்ள ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ குறும்படத்தை துருக்கி நாட்டை சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொருப்பேற்று தயாரித்துள்ளார்.

“ ரத்திந்திரன் எனது சிறு வயது நண்பர். நல்ல சினிமா பற்றிய விஷயங்களை ஆராய்வதுண்டு. பல சர்வதேச திறைபடங்களில் பணியாற்றியுள்ளார் ..இவர் ஜெர்மனியில் இயக்கிய Frullings Erwachen என்ற படத் தொகுப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர். இருவரும் பல வருடங்களுக்கு முன் குறும் படம் ஒன்றை தயாரித்த்துள்ளோம், அதுவும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. நீண்ட நாள் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது. இக்குறும்படம் ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்று எனது நண்பன் ரத்திந்திரனுக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறினார் இசையமைப்பாளர்.``````````````````
“ ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்று சூழல் ஆர்வலரின் பயணம் தான் கதை. 30நிமிடம் ஓடக்கூடிய இந்த த்ரில்லர் கதையில் பாடலோ பின்னணி இசையோ கிடையாது. அனாலும் ஜிப்ரான்  இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக எனக்கு பக்க பலமாய் இருந்தார். எனது ஒளிப்பதிவாளர் ஃபரூக் K  பாஷா மற்றும் ஜிப்ரான் ஆகியோருடன் பணிப்புரிந்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது.

“ எனக் கூறினார் ரத்திந்த்ரன் R பிரசாத் ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் R பிரசாத் இருவரும் பிரான்சில் மே 13 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ திரையிடலுக்கும் அழைக்கப் பட்டுள்ளனர். 

 


Post your comment

Related News
மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
கமலின் படத்திற்காக ஜெயிலுக்கு போன இசையமைப்பாளர் ஜிப்ரான்.!
இந்த விஷயம்னா கூச்சப்படவே மாட்டேன் - ஜிப்ரான் ஓபன்டாக்
அறம் படத்துக்காக ஹாலிவுட் இசைகுழுவுடன் ஜிப்ரான் இணைகிறார்
அர்னால்டு படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்?
யுவனை ரீப்ளேஸ் செய்த ஜிப்ரான்!
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions